”230 -ல் 150 தொகுதிகளை கைப்பற்றுவோம்...மத்தியப்பிரதேசம் தேர்தல் குறித்து ராகுல்காந்தி நம்பிக்கை”!

மத்தியப்பிரதேசத்தில் 150 தொகுகளில் வெற்றி பெறுவோம் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக தேர்தலில் மொத்தவுள்ள 224 தொகுதிகளில் 136 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது.
இதனைத்தொடர்ந்து, 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில் வருகின்ற நவம்பர் 28 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல்காந்தி ஆதரவளிப்பாரா? மாநிலங்களவையில் ஆம் ஆத்மி பெரும்பான்மை வகிக்குமா?
இந்நிலையில் தேர்தல் தொடர்பாக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் டெல்லியில் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுல்காந்தியும், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, தேர்தல் தொடர்பான விரிவான கலந்தாய்வில் ஈடுபட்டதாகவும், 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் 150 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
#WATCH | We had a detailed meeting right now and our internal assessment says that since we got 136 seats in Karnataka, we are now going to get 150 seats in Madhya Pradesh: Congress leader Rahul Gandhi pic.twitter.com/9rQgiJBumY
— ANI (@ANI) May 29, 2023