சாப்பிடாமல் வேலை பார்க்கும் ஆசிரியரை - சாப்பிட சொல்லி மிரட்டும் சிறுவனின் வீடியோ வைரல்...!

சாப்பிடாமல் வேலை பார்க்கும் ஆசிரியரை - சாப்பிட சொல்லி மிரட்டும் சிறுவனின் வீடியோ வைரல்...!

சாப்பிடாமல் வேலை பார்த்த ஆசிரியரை மழலை மொழியில் சாப்பிட சொல்லி மிரட்டும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கொல்லம் , புனலூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், சிறுவர்கள் முறையாக மதிய உணவு சாப்பிடுகிறார்களா என்பதை கண்காணித்தவாறு, தனது பணியை செய்துகொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த சிறுவன், முதலில் சாப்பிடு, அதன் பிறகு எழுது என மழலை மொழியில் செல்லமாக ஆசிரியரை மிரட்டினார். இதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த ஆசிரியை, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.