குடியரசு தின விழாவில் வானில் வட்டமடித்த ராணுவ விமானங்களின் வான் நோக்கு காட்சி!! இணையத்தில் வைரல்

குடியரசு தின விழாவில் ராணுவ விமானங்கள் வானில் வட்டமடித்ததன் காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு வெளியாகியுள்ளது.

குடியரசு தின விழாவில் வானில் வட்டமடித்த ராணுவ விமானங்களின் வான் நோக்கு காட்சி!! இணையத்தில் வைரல்

குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5 ரஃபேல் விமானங்கள் ,17 ஜாகுவார், P8 போசைடன், சினுக், மிக் ரக விமானங்கள் என மொத்தம் 75 போர் விமானங்கள் அணிவகுப்பில் பங்கேற்கும் என்று இந்திய விமானப்படை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் வானில் வட்டமடிக்கும் மற்றும் சாகசத்தில் ஈடுபடும் விமானங்களின் காட்சியை பொதுமக்கள் தெளிவாக பார்த்து ரசிக்கும் வண்ணம் போர் விமானத்தில் காக்பிட் என்று சொல்லக்கூடிய விமானியின் அறையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் காட்சியை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

அதன்படி போர் விமானங்கள் இரண்டு துருவ் ஹெலிகாப்டர்கள் மற்றும் இரண்டு ஏஎல்எச் ருத்ரா ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்ததன் வான் நோக்கு காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. 

இதேபோல் 17 ஜாகுவார் போர் விமானங்கள் வானில் 75 என்ற வடிவில் நீந்தி சென்றதன் வீடியோ காட்சியை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. 

ஒரு ரஃபேல், இரண்டு ஜாகுவார், இரண்டு MiG-29 UPG, இரண்டு Su-30 MI என மொத்தம் 7 போர் விமானங்கள் 'பாஸ்' உருவாக்கத்தின் வான்நோக்கு காட்சியும் வெளியாகியுள்ளது. 

அம்புக்குறி அமைப்பில் பறக்கும் ஐந்து ரஃபேல் போர் விமானங்களின் காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது