செகந்திரபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை ..!

செகந்திரபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை ..!

தெலங்கானா - ஆந்திரா மாநிலம் இடையேயான வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

செகந்திரபாத் முதல் விசாகப்பட்டினம் வரை செல்லும் நாட்டின் 8-வது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்த நிலையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் கலந்துகொண்டார். தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களை சுமார் 700 கிலோமீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரயில் சேவையாக இது கருதப்படுகிறது.

இந்த வந்தே பாரத் விரைவு ரயில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரயில் நிலையங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.