இந்திய ரயில்வே தற்போது பல வகையான மாற்றங்களையும், புதுமைகளையும் கொண்டு வருகிறது. பல இடங்களில் மெட்ரோ ரயில்கள் மற்றும் எடை குறைவான சுத்தமான ரயில் பெட்டிகள் என, ஏதாவது ஒரு புதுமையைக் கொண்டு வரும் ரயில்வே துறை சமீபத்தில் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் என்பதனை பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது, அதன் இரண்டாம் வெர்ஷனை இன்று சோதனை செய்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அதன் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெலியிட்டுள்ளார்.
ஷதாப்தியை முந்திய ‘ட்ரெய்ன் 18’:
இந்தியாவின் மிக பிரபலமான ஷதாப்தி எக்ஸ்பிரசிற்கு பதிலாக செய்லபாட்டிற்கு வந்திருக்கும் வந்தே பாரத் எனும் ட்ரெயின் 18, சுமார் 16 பெட்டிகளுடன், மணிக்கு 200 கி.மீ தூரம் செல்லக்கூடிய திறன் கொண்டுள்ளது. ஆனால், இந்திய ரயில்வே துறையின் அனுமதி இருந்தால் மட்டுமே, தண்டவாளங்களில், மணிக்கு 200 கி.மீ தூரம் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலின் பெட்டிகள், பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் (ICF) ஆல் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வேகமாக ஓடும் ரயில்:
‘ஏரோடைனமிக்’ அதாவது காற்றியக்குவியல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஓட்டுனர் பெட்டிக் கொண்டு, வேகமாக ஓடும் இந்த ரயில், திருப்பங்களிலும் வேகமாக போகும் படியாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லி, வாரணாசி, மற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா பகுதிகளுக்கு இடையே ஓடும் இந்த ரயிலானது, இந்தியாவின் அனைத்து பகுதைகளையும் உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட ரீஜெனெரேட்டின் ப்ரேக் சிஸ்டம் கொண்டுள்ள இந்த ரயில், பயணிகளின் பாதுகப்பிற்கு எந்த விதத்திலும் குறை தராது என்றும், பெட்டிகளுக்கு கீழே அனைத்து கருவிகளும் வைக்கப்பட்டிருப்பதால், முழுவதுமாக ஏசி பொருத்தப்பட்டிருக்கும் இந்த ரயிலில், அதிக அளவில் பயணிகள் பயணிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது அதிலும் மேலானது!!!!
இந்த ரயிலின் இரண்டாம் கட்ட சோதனை, 225 கிமீ தூரமுள்ள கோடா- நாக்டா ரயில் நிலையத்தில், 110 கிமீ வேகத்தில் செய்யப்பட்டதை அடுத்து, 180 கிமீ வேகத்தை இன்று சோதனை செய்தனர் அதிகாரிகள். இதன் வீடியோவை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “#VandeBharat-2 கோடா- நாக்டா பகுதியில், 120/130/150 மற்றும் 180 கி.மீ வேகத்தில் வேக சோதனை நடைப்பெற்றது” என எழுதி பதிவிட்டுருந்தார். இதனை ஆதரிக்கும் வகையில் பலர் கமெண்ட் செய்த்ததி தொடர்ந்து, ‘பிரவீன் குமார்’ என்ற பயணி ஒருவர், “390 சிசி கொண்ட இரு சக்கர வாகனம் கூட மணிக்கு 173 கி.மீ வேகத்தில் ஓடும். இதில், வெறும் 180 கி.மீ வேகத்தில் போகக்கூடிய ரயிலுக்கு, ஏதோ பெரிய சாதனை படைத்தது போல எதற்கு இவ்வளவு விளம்பரம்?” என கேட்டுள்ளார். அதற்கு மற்றொரு பயணி, “ஏன் என்றால், அந்த பைக் ரயில் தண்டவாளங்களில் ஓடாது. மேலும், 16 பெட்டிகளைக் கொண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்ட வண்டியும் அது இல்லை” என பதிவிட்டு, பல லைக்குகளையும் குவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த ரயில் இந்தியா முழுவதும் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்றும், எதுவும், தமிழ்நாட்டிற்கு எப்போது வரும் என்றும் அனைவரும் கேள்வி எழுப்பி, ஆர்வத்தோடு காத்து வருகின்றனர்.