உத்தரகாண்ட் மாநில பெருமழைக்கு இதுவரை 64 பேர் பலி

உத்தரகாண்ட் மாநில பெருமழைக்கு இதுவரை 64 பேர் பலியாகி உள்ளனர்.அங்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டு இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

உத்தரகாண்ட் மாநில பெருமழைக்கு இதுவரை 64 பேர் பலி

உத்தரகாண்ட் மாநில பெருமழைக்கு இதுவரை 64 பேர் பலியாகி உள்ளனர்.அங்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டு இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 


உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  மாநில முதலமைச்சர் மற்றும் ஆளுநர் மூவரும் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக வான்வழியாக மாநிலத்தின் பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தனர். 

பின்னர்  டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கனமழை பெய்யக்கூடும் என்பது  குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படதன் காரணமாக பெரிய அளவிலான பாதிப்புகளை உத்தரகாண்ட் மாநிலம் தவிர்த்துள்ளது என கூறினார்.  

கனமழைக்கு பிறகு  தற்போது நிலைமை படிப்படியாக சீராகி வருகிறது என்றும் யாத்திரைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும், வெள்ளம் மற்றும்  நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி தவித்த 3500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அமித்ஷா கூறினார்.

 7 தேசிய பேரிடர் மீட்பு குழு , 7 மாநில பேரிடர் மீட்பு குழு மற்றும் 5,000 மாநில போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என்றும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும்  தெரிவித்தார்