சரத்பவாரை மிரட்டும் மத்திய அமைச்சர் - குற்றம் சாட்டும் சஞ்சய் ராவத்!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பாவருக்கு மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளதாக சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

சரத்பவாரை மிரட்டும் மத்திய அமைச்சர் - குற்றம் சாட்டும் சஞ்சய் ராவத்!

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் வகையில் சிவசேனா எம்.எல்,ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க கூட்டணியின் தலைவர் என்ற முறையில் சரத்பவார் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு மத்திய அமைச்சர் நாராயண் ரானே எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் யாரும் வீட்டிற்கு திரும்ப மாட்டீர்கள் என்று மிரட்டல் விடுத்திருந்தார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சஞ்சய் ராவத்,  சரத் பவார் மகாராஷ்டிராவின் மகன் என்றும்  அவரை மிரட்டுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இத்தகைய அச்சுறுத்தல்களை ஆதரிக்கிறீர்களா என்பதை மகாராஷ்டிரம் தெரிந்து கொள்ள விரும்புகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.