தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்க ஒரே மாதிரியான சட்டம்.. பாஜக வழக்கறிஞர் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நாடு முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மதம் சார்ந்த தொண்டு அமைப்புகள் ஆகியவற்றிற்கான ஒரே மாதிரியான சட்டத்தை உருவாக்க கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்க ஒரே மாதிரியான சட்டம்.. பாஜக வழக்கறிஞர் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்தியாயா, வக்பு வாரியங்கள் மற்றும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துகளை நிர்வகிப்பதற்கு என்று தனி சட்டமும், பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மதம்சார்ந்த அமைப்புகளை நிர்வகிப்பதற்கு என்றும் தனித்தனியாக சட்டங்கள் இருப்பதாகவும் இவற்றை மாற்றி ஒரே மாதிரியான பொது சட்டத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, எந்த ஒரு நீதிமன்றமும் குறிப்பிட்ட சட்டத்தை உருவாக்குங்கள் என நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது எனக் கூறியதோடு, இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் தாங்கள் இதில் தலையிட விரும்பவில்லை கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.