பிரிட்டன் தலைமையில் ஜி-7 மாநாடு: மோடி பங்கேற்பு

இன்று மற்றும் நாளை நடைபெறும் 'ஜி - 7' மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, காணலி மூலம் பங்கேற்கிறார்.

பிரிட்டன் தலைமையில்  ஜி-7 மாநாடு: மோடி பங்கேற்பு

இன்று மற்றும் நாளை நடைபெறும் 'ஜி - 7' மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, காணலி மூலம் பங்கேற்கிறார்.

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைப்பு, 'ஜி - 7' என, அழைக்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான ஜி - 7 மாநாடு இன்றும், நாளையும் ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைமை ஏற்று நடத்துகிறது.

இதில் விருந்தினர்களாக பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம், இந்த மாநாட்டில் பங்கேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றும், நாளையும், இறுதி அமர்வுகளில் அவர் பங்கேற்க உள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.