உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக  உதய் உமேஷ் லலித் நியமனம் : ஆக.27 அன்று பதவியேற்கிறார் !!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி. ரமணாவின் பதவிக்காலம் ஆக.26ம் தேதியுடன் நிறைவடைகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக  உதய் உமேஷ் லலித் நியமனம் : ஆக.27 அன்று பதவியேற்கிறார் !!

உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணிமூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வருகிற ஆகஸ்ட் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து புதிய தலைமை நீதிபதியை நியமனம் செய்வது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திற்கு என்.வி.ரமணா எழுதியிருந்த கடிதத்தில், நீதிபதி உதய் உமேஷ் லலித் பெயரை பரிந்துரைத்திருந்தார். 

49வது தலைமை நீதிபதி

இந்த நிலையில் என். வி.ரமணாவின் பரிந்துரையை ஏற்றுள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அவரை 49வது தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வருகிற 27ம் தேதி பதவி ஏற்கிறார். 

இந்த உதய் உமேஷ் லலித் வழக்கறிஞராக தொழிலை தொடங்கி, பின்னர்   மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினார். அதன்பின் கடந்த 2004ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பதவி உயர்வு பெற்றார். 

ஆக.27ல் பதவியேற்பு

இவர் சிபிஐயின் சிறப்பு பப்ளிக் பிராசிகியூட்டராகவும் பணியாற்றியுள்ளார். இந்தநிலையில் 2014ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த அவருக்கு தற்போது தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வழக்குரைஞராக இருந்து  உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், பின் தலைமை நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்ற 2வது நபர் யுயு லலித் என்பது குறிப்பிடத்தக்கது.