ரூ.4.5 லட்சத்திற்கு விற்பனையான இரண்டு ஆடுகள்…  

உத்தரபிரதேசத்தில் இரு ஆடுகள் நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது வியாபாரிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.4.5 லட்சத்திற்கு விற்பனையான இரண்டு ஆடுகள்…   

உத்தரபிரதேசத்தில் இரு ஆடுகள் நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது வியாபாரிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்ரீத்தை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைக்கட்டியுள்ளது. உத்தரபிரதேச சந்தைகளிலும் பல்வேறு வகையிலான ஆடுகளை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஏற்கனவே  கொழு கொழுவென வந்த ஆடுகளை பலரும் அதிக விலைக்கு வாங்கி சென்ற நிலையில், 170 கிலோ மற்றும் 150 கிலோ எடை கொண்ட இரு ஆடுகள் கோமதி ஆற்றங்கரையோரம் உள்ள சந்தையில் 4 அரை லட்சம் ரூபாய்க்கு விலை போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவற்றின் உடல்தோற்ற்ம் தான் என கூறப்படுகிறது.

மேலும் அவைகளை கொழுமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள அதன் உரிமையாளர் நாள்தோறும், முந்திரி, பிஸ்தா, இனிப்புகள், பழச்சாறு ஆகியவற்றை வழங்கி வந்துள்ளார்.