சக ராணுவ வீரர்கள் இருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய - ராணுவ வீரர்!

சக ராணுவ வீரர்கள் இருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய - ராணுவ வீரர்!

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் ராணுவ முகாமில் பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர், சக வீரர்கள் இருவர் மீது துப்பாகி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் எல்லை பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயது இளம் ராணுவ வீரர் மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த சக ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த இரு ராணுவ வீரர்களை சக வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். வீரர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.