ராகுல் காந்தியின் பதிவை நீக்கிய டுவிட்டர்..!  

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமையின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் கன்டோன்மென்ட் பகுதியில் மதகுரு உள்பட 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட, 9 வயது சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, அந்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாளத்தை ராகுல் காந்தி வெளிப்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் குறிப்பிட்ட பதிவை நீக்கி, டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் அடையாளத்தை புகைப்படம் வாயிலாக வெளிப்படுத்துவது போக்சோ சட்டத்தின் படி தவறானது என்றும், ஆகையால் அந்த பதிவு நீக்கப்படுவதாகவும் டுவிட்டர் இந்தியா கூறியுள்ளது.