கர்நாடகாவில் 7 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று

கர்நாடகாவில் 7 பேருக்கு கொரோனா தொற்றின் புதிய வகை மாறுபாடான AY.4.2 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

கர்நாடகாவில் 7 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றின் புதிய வகை மாறுபாடான AY.4.2 பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாற்றமடைந்த புதிய வகை வைரஸ், அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவிலும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் AY.4. 2 தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் கர்நாடகாவில் 7 பேருக்கு இவ்வகை தொற்று பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் டி. ரந்தீப், இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு வருபவர்களுக்கு, 72 மணி நேரத்திற்கு உள்ளாக எடுக்கப்பட்ட RT-PCR நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.