”மொத்த வர்த்தகம் 14,100 கோடிகள் ஆகும்....”வெளியுறவுத் துறை அமைச்சர்!!!

”மொத்த வர்த்தகம் 14,100 கோடிகள் ஆகும்....”வெளியுறவுத் துறை அமைச்சர்!!!
Published on
Updated on
1 min read

மத்திய ஆசிய நாடுகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சிறந்த இணைப்பு தேவை.

இணைப்பு திட்டங்கள்:

சபாஹர் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடம் ஆகியவை இந்தியாவின் பொருளாதார சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறியுள்ளார்.  இந்த இணைப்பு திட்டங்கள் உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதோடு சர்வதேச சட்டத்தையும் மதிப்பதாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மொத்த வர்த்தகம்:

டாக்டர் ஜெய்சங்கர் கூறுகையில், SCO உறுப்பினர்களுடனான  மொத்த வர்த்தகம் 14,100 கோடிகள் ஆகும் எனவும் இது பன்மடங்கு வளர வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார்.  மேலும் நியாயமான சந்தை அணுகல் என்பது நமது பரஸ்பர நன்மைக்கான ஒரே வழி எனவும் தெரிவித்துள்ளார்.

தினை ஆண்டு:

வரும் 2023ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச தினை ஆண்டாக கொண்டாடப்படும் என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.  உணவு நெருக்கடியை எதிர்த்துப் போராட எஸ்சிஓ உறுப்பு நாடுகளுடன் அதிக ஒத்துழைப்பை ஊக்குவிக்க இந்தியா விரும்புகிறது எனவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜெய் சங்கர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com