நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று.... தலைநகரில் பலத்த பாதுகாப்பு!

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லி முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் கொரோனா பரவல் காரணமாக, சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

தலைநகர் டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் செங்கோட்டையை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர். மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்காணிக்க நகர் முழுவதும் சுமார் ஆயிரக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க டயர் பஸ்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளன.