திருவனந்தபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி கார் மீது மோதி விபத்து!!

திருவனந்தபுரத்தில் ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

திருவனந்தபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி கார் மீது மோதி விபத்து!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கடைக்கல் என்னும் பகுதியிலிருந்து நிலமேல் பகுதி நோக்கி  டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் ஓட்டுனருக்கு திடீரென ஏற்பட்ட உடல் நிலை குறைவு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி நேராக சென்று வலது புறமாக நின்று கொண்டிருந்த கார் மீது மோதி நின்றுள்ளது.

இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது . இதில் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர் தப்பிய காரில் பயணம் செய்த இருவர் உட்பட லாரி ஓட்டுனரும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.