அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க இந்தியர்களுக்கு தடை அறிவித்துள்ளது...

கச்சத்தீவு அந்தோனியர் தேவாலய திருவிழாவில் பங்கேற்க நடப்பாண்டிலும் இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க இந்தியர்களுக்கு தடை அறிவித்துள்ளது...

இலங்கை மற்றும் இந்திய மக்கள் ஆண்டு தோறும் இணைந்து அந்தோணியார் திருவிழாவை கொண்டாடி வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக திருவிழாவிற்கு மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதில் மக்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் இலங்கையை சேர்ந்த 500 பேரை மட்டும் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

கொரோனா பரவலை காரணமாக வைத்து இந்தாண்டின் திருவிழாவிற்கும் இந்தியர்களை அனுமதிக்கவில்லை என்பது இந்திய மீனவர்களிடையே பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.