கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு அரசின் இலவச சிகிச்சை கிடைக்காது: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு...

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு அரசின் இலவச சிகிச்சை கிடைக்காது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு அரசின் இலவச சிகிச்சை கிடைக்காது: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு...

 இந்தியாவிலே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக கேரளா உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி இதுவரை போட்டுக்கொள்ளாத ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வாரத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை தலைமை  ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.