உலகமே கேலி செய்யும் காங்கிரஸ் கட்சியை போல் தாங்கள் இருக்க விரும்பவில்லை - மாயாவதி

உலகமே கேலி செய்யும் காங்கிரஸ் கட்சியை போல் தாங்கள் இருக்க விரும்பவில்லை - மாயாவதி

உலகமே கேலி செய்யும் காங்கிரஸ் கட்சியை போல் தாங்கள் இருக்க விரும்பவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மறைமுகமாக சாடியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ராகுல் காந்தி, அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்துக்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டார்.

மேலும் மாயாவதியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதாக கூறியும், அவர் கண்டுகொள்ளவில்லை என்பதோடு, அமலாக்கத்துறை, பெகாசஸ் விவகாரங்களுக்கு பயந்து தலீத் மக்களுக்காக குரல் கொடுக்கவும் இல்லை என தெரிவித்தார்.

இந்தநிலையில் ராகுலை கடுமையாக விமர்சித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள மாயாவதி, தங்களது கட்சியில் பிரதமரை வலுக்கட்டாயமாக கட்டி அணைக்கும் கட்சி தலைவர்கள் இல்லை என சாடினார். மேலும் சீனாவை போல் இந்தியாவில் காங்கிரஸ், எதிர்கட்சிகள் இல்லாத ஒரே ஆளுமையை கொண்டு வர பாஜக- ஆர்எஸ்எஸ் முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.