2024 இல் வருமான வரி சோதனையே இருக்காது..! என்ன சொல்கிறார் தெலங்கானா அமைச்சர்

2024 இல் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் நாட்டின் பிரதமர் ஆகும் போது நாட்டில் வருமான வரி சோதனையே இருக்காது என அம்மாநில அமைச்சர் மல்லா ரெட்டி பேச்சு.
மல்லா ரெட்டி:
தெலுங்கானா அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மல்லா ரெட்டி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இச்சோதனையின் போது, மல்லாரெட்டியின் மூத்த மகன் மகேந்தர் ரெட்டி அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவரிடம் வருமான வரித்துறை அதிகாரி, சில ஆவணங்களில் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கினார் என் குற்றம்சாட்டும் எழுந்தது.
இதையும் படிக்க: யார் இந்த எல் சிசி...மோடிக்கும் அவருக்குமான ஒற்றுமை என்ன?!!
2024 இல் பிரதமர்:
தெலங்கான மாநிலம், சித்திபேட்டையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மல்லா ரெட்டி, 2024 மக்களவைத் தேர்தலில் சந்திரசேகர் ராவ் நாட்டின் பிரதமராவார். அதன் பிறகு நாடு முழுவதும் வருமான வரி தொடர்பான தளர்வுகள் அறிவிக்கப்படும். அதன் பிறகு நாட்டில் எங்குமே வருமான வரிச் சோதனை என்ற நிகழ்வே இருக்காது எனக் கூறிப்பிட்டுள்ளார்.
தங்களுடைய விருப்பப்படி வரி:
மேலும் பேசிய அவர், ஒவ்வொருவரும் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வருமானத்தை ஈட்டிகொள்ள முடியும். இது போன்ற ஒரு சட்டத்தை சந்திரசேகர ராவ் கொண்டு வருவார் எனவும், மக்கள தங்களுடைய விருப்பப்படி வரி செலுத்திக் கொள்ளும் முறையும் அமலுக்கு வரும். இதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.