5 மாநில சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத்!!

5 மாநில சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவித்துள்ளார்.

5 மாநில சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத்!!

நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்ற விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே, மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதாகவும், விவசாயிகளின் ஆதரவு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தின் காரணமாகவே சட்டங்களை திரும்ப பெற்றதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத், விவசாயிகள் போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றியின் விளைவாக இன்று அரசியல் கட்சிகள் விவசாயிகள் குறித்து சிந்திக்க தொடங்கியிருப்பதாகவும், தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் தெரிவித்தார்.