வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் திட்டம் இல்லை-மத்திய அரசு

விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் திட்டம் இல்லை-மத்திய அரசு

விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விவசாய உற்பத்தியை அதிகரிக்க மற்றும் விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கும் வகையில், விவசாயத்திற்கான தனி வருடாந்திர பட்ஜெட் அறிமுகப்படுத்த  ஏதேனும் திட்டம் உள்ளதா? என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ள மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அது போன்ற திட்டம் இல்லை என்றும்  அதேநேரத்தில், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம் மறறும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நல்ல பல திட்டங்கள் மத்திய பட்ஜெட் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.