உயிரை பணயம் வைத்து சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்ட இளைஞர்கள்!!!

உயிரை பணயம் வைத்து சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்ட இளைஞர்கள்!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மோசமான வானிலை நிலவி வந்தது. நள்ளிரவில் பெய்த கனமழையால், மழைநீர் வடிகால்களிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் கார் ராம்நகரின் கியாரி கிராமத்தில் மழைநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்டது. கார் நகர்ந்து செல்வதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக காரில் இருந்து இறக்கியுள்ளனர். 

ராம்நகர் தாலுகாவுக்கு உட்பட்ட கியாரி கிராமத்தில்  இரவில் பெய்த கனமழை காரணமாக நெடுஞ்சாலை மூடப்பட்டது. அதே நேரத்தில், டெல்லியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். காலையில் டெல்லியை சேர்ந்த ஹர்ஷ்குமார் என்பவர் அவரது நண்பர் அங்கித்துடன் காரில் ராம்நகர் சென்றுள்ளார்.

காலை எட்டு மணிக்கு ரிசார்ட்டுக்கு திரும்பும் வழியில், வடிகால் பலமாக ஓடுவதை ஹர்ஸ்குமாரால் அறிந்துகொள்ள முடியவில்லை. சாக்கடையை கடப்பதற்காக காரை தண்ணீரில் இறக்கிய அவர் நீரோட்டம் வந்தவுடன், கார் காகிதப் படகு போல ஓடத் தொடங்கியது. 

அப்போது, ​​சுற்றுலா பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுற்றுலா பயணிகளை கிராம மக்கள் பாதுகாப்பாக காரில் இருந்து வெளியே எடுத்து காப்பாற்றியுள்ளனர். மழைநீர் வடிகாலின் ஓட்டம் மிக வேகமாக இருந்ததால், கார் கிச்சடி ஆற்றை அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து மக்களால் தவிர்க்கப்பட்டது.

கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யோகி போஹ்ரா, நிக்கு சதி, அனில் ராவத், வினோத் ராவத், நரேந்திர ராவத் உள்ளிட்டோர் ஆற்றில் காரை போட்டு விட்டு உள்ளே இருந்த இருவரையும் பத்திரமாக வெளியே எடுத்தனர். இதுகுறித்து சமூக சேவகர் வினோத் புதானி, “இந்த வாய்க்காலில் பாலம் தேவை. ஏனெனில் இந்த வழியில்தான் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்கிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்தில் டேராடூன், சாமோலி, தெஹ்ரி, பித்தோராகர், ருத்ரபிரயாக், உத்தர்காஷி ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இந்த நேரத்தில் இடி மின்னலுக்கான வாய்ப்பும் உள்ளது என வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: பாஜகவின் பிம்பங்களை உடைத்து சவால்களை சாதனைகளாக மாற்றுவாரா அசோக் கெலாட்!!!