சொகுசு காரில் பூந்தொட்டிகள் திருட்டு...!!

சொகுசு காரில் பூந்தொட்டிகள் திருட்டு...!!

நாக்பூாில் ஜி20 மாநாட்டிற்கு அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருந்த பூந்தோட்டிகளை இளைஞா்கள் காரில் திருடி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  மாநாடு நடைபெறும் பகுதிகளில் ஆங்காங்கே அலங்காரத்திற்காக பூந்தொட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மராட்டிய மாநிலம் நாக்பூரின் ராணா பிரதாப் நகரில் ஜி20 மாநாட்டிற்காக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அலங்கார பூந்தொட்டிகளை இளைஞா்கள் இருவா் சொகுசு காரில் வந்து திருடி சென்றுள்ளனா். 

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், இருவரையும் போலீசாா் கைது செய்துள்ளனா். 

இதையும் படிக்க:  மேலும் நீட்டிக்கப்பட்ட காவல்... என்ன செய்யப்போகிறார் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர்!!