உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம்... வேகமாக நடைபெற்று வரும் கட்டுமான வேலைகள்...

மணிப்பூரில் ரெயில்வே துறையால் கட்டப்பட்டு வரும் உலகிலேயே மிக உயரமான ரெயில்வே பாலத்தின் வேலைகள், வேகமாக நடைபெற்று வருகின்றன.

உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம்... வேகமாக நடைபெற்று வரும் கட்டுமான வேலைகள்...

ஜிராபம்-இம்பால் இடையே 111 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மிகவும் உயரமான தூண்களுடன் கூடிய இந்தப் பாலம், மணிப்பூரின் நோனி பள்ளத்தாக்கின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது. 141 மீட்டர் உயரம் கொண்ட இந்த ரயில் பாலத்தின் நீளம் 703 மீட்டர் ஆகும். ஐரோப்பாவின் மாண்டினீக்ரோவின், மலா- ரிஜேகா வையாடக்ட் என்ற 139 மீட்டர் பாலத்தின் சாதனையை இந்த உயரம் முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.

நோனி பள்ளத்தாக்கில் கட்டப்பட்டு வரும் இந்தப் பாலம் உலகின் உயரமான பாலமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள தலைமை பொறியாளர் சந்தீப் சர்மா, பாலத்தின் கடைசி கட்ட பணிகள் 2023-ம் ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என கூறியுள்ளார்.