கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் 50% பேருக்கு மீண்டும் தொற்று அறிகுறியா..?

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் இப்போதும்  தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் 50% பேருக்கு மீண்டும் தொற்று அறிகுறியா..?

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பின் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 3 அலைகள் ஏற்பட்டுள்ள நிலையில் தொற்று பாதிப்புக்கு ஆளான ஏராளமானோர் குணமடைந்து தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இதில் இரண்டாம் அலையில் 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் பெருமளவில் தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில் மூச்சு திணறல், சுவாச திறன் குறைபாடு போன்ற கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கும் 50 சதவீதம் பேருக்கு மேல் தற்போதும், தொற்றுக்கான அறிகுறிகளில் ஒன்று தென்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தி லான்செட் சுவாச மருத்துவம் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 2 ஆண்டுகளுக்கு பிறகும் உடல் சோர்வு, சுவாச பிரச்சனை, தூக்கமின்மை போன்ற தொற்று அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு பின் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி போன்ற உடல் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரவலாக கூறப்படும் நிலையில் தற்போது இது ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.