உத்தரபிரதேசம்: மீரட்டை வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி!!

இந்தியாவில் முதன்முறையாக நடைபெறக் கூடிய செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டம் மீரட்டை வந்தடைந்தது.

உத்தரபிரதேசம்: மீரட்டை வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி!!

ஜூலை 28-ம் முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று தொடர் ஜோதி ஓட்டத்தை டெல்லியில் கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த தொடர் ஜோதி ஓட்டமானது இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வருகிறது.

அதன்படி, செஸ் ஒலிம்பியாட் ஜோதி தற்போது உத்தரபிரதேசம் மாநிலம் மீராட் பகுதியை வந்தடைந்துள்ளது. இந்த ஜோதியை செஸ் கிராண்ட்மாஸ்டர் தேஜஸ் பக்ரேவிடமிருந்து அம்மாநில் அமைச்சர் சோமேந்திர தோமர் பெற்றுக்கொண்டார். இந்த ஒலிம்பியாட் ஜோதி  ஜூலை 27-ம்  தேதி மாமல்லபுரத்தை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.