விமானத்தை தரை இறக்கும் போது விபத்து - விமானிக்கு 85 கோடி ரூபாய் அபராதம்!!

விமானம் பறக்க தகுதி இழந்ததால் அதற்காக 60 கோடியும், விமானத்தை வாடகை எடுத்ததற்கான செலவான 25 கோடியையும் சேர்த்து விமானிக்கு மொத்தம் 85 கோடி ரூபாய் விமானிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விமானத்தை தரை இறக்கும் போது விபத்து - விமானிக்கு 85 கோடி ரூபாய் அபராதம்!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த விமானி மஜித் அக்தர் என்பவர் கொரோனா காலக்கட்டத்தின் போது பாதுகாப்பு கவச உடையினை அணிந்து விமானத்தை இயக்கியுள்ளார். மேலும் கொரோனா சோதனைக்களுக்கான மாதிரிகள் மற்றும் நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்துகள் போன்றவற்றை வெளிமாநிலங்களுக்கு அவர் கொண்டு சென்றார். இதனால் அவரை கொரோனா போர் வீரர் எனவும் அழைத்து வந்தனர்.  இதற்கிடையேகடந்த ஆண்டு மே மாதம் 6-ந்தேதி விமானி மஜித் அக்தர் விமானத்தில் மருந்துகளை இந்தூரில் இருந்து குவாலியருக்கு எடுத்துச் சென்றார்.9 பேர் செல்லக்கூடிய அந்த விமானம் குவாலியர் விமான தளத்தில் தரை இறங்கியபோது ஓடு பாதையில் இருந்த தடுப்புகள் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இதில் விமானத்தின் பெரும் பகுதிகள் நொறுங்கியது. விமானி மஜித் அக்தர், துணை விமானி உள்பட 3 பேர் லேசான காயம் அடைந்தனர். விமான விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தியது. 27 ஆண்டு அனுபவம் கொண்ட மஜித் அக்தரின் விமான லைசன்ஸ் ஒரு ஆண்டுக்கு ரத்து செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தை மத்தியபிரதேச அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரூ.65 கோடிக்கு வாங்கியது. விபத்துக்கு பிறகு அந்த விமானம் பறப்பதற்கு தகுதியை இழந்துள்ளது என்றும் இதனால் தனியாரிடம் இருந்து விமானங்களை வாடகைக்கு எடுக்க அரசு ரூ.25 கோடி செலவழித்தது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விபத்துக்கு காரணமாக இருந்ததால் விமானி மஜித் அக்தருக்கு ரூ.85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விமானம் பறக்க தகுதி இழந்ததால் ரூ.60 கோடியும், தனியாரிடம் இருந்து விமானத்தை வாடகைக்கு எடுத்த செலவான ரூ.25 கோடியும் சேர்த்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.துகுறித்து மஜித் அக்தர் கூறும்போது, ‘ஓடு பாதையில் உள்ள தடுப்பு தடைகளால் விபத்து ஏற்பட்டது. அது குறித்து விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து எனக்கு தகவல் தெரிவிக்க தவறிவிட்டனர். தனக்கு குவாலியர் விமான கட்டுப்பாட்டகம் சார்பில் கருப்பு பெட்டியில் இருந்து எந்தவித தகவலும் வழங்கப்படவில்லை’ என்று குற்றம்சாட்டினார்.