கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்... பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு...

கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற பார்வை தேவை என, ஜி20 மாநாட்டில் எடுத்துரைத்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்... பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு...

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவின் பங்களிப்புகளை தாம் எடுத்துரைத்தாக தெரிவித்துள்ளார். உலகளாவிய நன்மையை மேம்படுத்துவதற்கு முக்கியமான நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதைபோல தமது மற்றொரு டுவிட்டர் பதிவில், தமது கருத்துகளின் போது பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்ததாக குறிப்பிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவின் பங்களிப்புகள், ஒரே பூமி - ஒரே ஆரோக்கியம் என்ற பார்வை, சுகாதாரப் பாதுகாப்பில் புதுமைகளை மேம்படுத்துதல், நெகிழ்ச்சியான உலகளாவிய விநியோக சங்கிலிகளின் தேவை மற்றும் மனித மேம்பாட்டிற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் தொடர்பான அம்சங்களை எடுத்துரைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.