இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள்...எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள்...எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

இந்திய விமானப் படையுடன் இணைக்கப்பட்டுள்ள இலகு ரக ஹெலிகாப்டர் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு மைல்கல்லாக  அறிமுகம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இலகு ரக ஹெலிகாப்டர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஹெலிகாப்டரை ஒப்படைத்தார். இதில் விமான படை தளபதி சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

சுமார் 3 ஆயிரத்து 887 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தில் இதுவரை 15 ஹெலிகாப்டர்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், முதல் இலகுரக ஹெலிகாப்டர் இன்று விமான படையில் இணைக்கப்பட்டது. 

இதையும் படிக்க: அமைச்சர்களுக்கு வாய் கொழுப்பு அதிகம்... ஓசியை அனுபவிப்பவர்கள் ஓசியை பற்றி பேசுகிறார்கள்...!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தயாரித்துள்ள, இரட்டை இன்ஜின்கள் கொண்ட இந்த ஹெலிகாப்டரில் ராணுவ தளவாடங்கள் பொருத்தப்பட்டு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உயரமான மலைகளில் பறக்கக் கூடியதாக இந்த ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேரங்களிலும், மழை காலங்களிலும், அடர்ந்த காடுகளிலும் கூட இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும். மொத்தம் 5 புள்ளி 8 டன் எடை கொண்ட இந்த ஹெலிகாப்டர் இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டு, ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளில் மைல்கல்:

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பில் இந்திய விமானப்படை முக்கிய பங்கு வகித்துள்ளதாக புகழாரம் சூட்டினார். மேலும், தற்போது இணைக்கப்பட்டுள்ள இலகுரக ஹெலிகாப்டர் விமானப்படைக்கு கூடுதல் பலம் கொடுக்கும் என தெரிவித்தார். கார்கில் போரின்போதே இந்தியாவுக்கு தாக்குதல் திறன் கொண்ட ஹெலிகாப்டரின் தேவை இருந்ததாக குறிப்பிட்ட அவர், கடந்த 20 ஆண்டுகளில் இந்த நிகழ்வு ஒரு மைல்கல் எனக் கூறினார்