என்னது.. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பா...? எவ்வளவு தெரியுமா?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  8 புள்ளி 1 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

என்னது.. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பா...? எவ்வளவு தெரியுமா?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அறங்காவலர் வாரியம் தீர்மானித்து வருகிறது. அந்தவகையில் வருங்கால வைப்பு நிதிக்கு 2021-22 நிதியாண்டில்  வழங்கப்படும் வட்டி விகிதத்தை மாற்றியமைப்பது குறித்து  அறங்காவலர் வாரியம் இன்று ஆலோசனை நடத்தியது.
இதில் பி.எப். கணக்குதாரர்களின் ஆண்டு வட்டியை 8 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 1 சதவீதமாக குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 

இந்த வட்டி விகித மாற்றத்திற்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வட்டி குறைப்பால் பி.எப் கணக்கு வைத்துள்ள 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.  

முன்னதாக 2016-17 நிதியாண்டில் பி.எப். நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு 8 புள்ளி 65 சதவீதம் வட்டி வழங்கியது. அதன்பின்னர் 2017-18ம் நிதியாண்டில் 8 புள்ளி 55 சதவீதமும், 2018-29ல் 8 புள்ளி 65 சதவீதமும் வழங்கப்பட்டது. கடந்த 2019-20 நிதியாண்டில் கொரோனா காரணமாக பி.எப் வட்டி விகிதம் மீண்டும் 8 புள்ளி 50 ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் 8 புள்ளி 1 ஆக குறைக்கப்பட்டுள்ளது.