இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று 26 சதவீதம் குறைவு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட 26 சதவீதம் குறைந்து பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று  26 சதவீதம் குறைவு!

நாடு முழுவதும் தினசர் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஆனால் திடீரென்று கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 739 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 91 ஆயிரத்து 779 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 12 ஆயிரத்து 425 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதை அடுத்து மீண்டோர் சதவீதம் 95 புள்ளி 5 சதவீதத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை 86 புள்ளி 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்தியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.