இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இதுவரை கண்டறியப்பட வில்லை...

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இதுவரை கண்டறியப்பட வில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இதுவரை கண்டறியப்பட வில்லை...

தென்னாப்பிரிக்காவில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இவ்வகை வைரஸ், டெல்டாவை காட்டிலும் அதீத வீரியம் கொண்டது எனவும், உயிரிழக்கும் ஆபத்தை ஏற்படுத்த கூடும் எனவும் உலக சுகாதர அமைப்பு எச்சரித்துள்ளது. இதனிடையே புதிய திரிபு காரணமாக மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

மகாராஷ்டிராவின் தானே பகுதியில்  சமீபத்தில் நைஜீரியா சென்று திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அது ஒமிக்ரான் தானா என கண்டறிய அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் முதியோர் இல்லம் ஒன்றில் அதன் ஊழியர்கள் உள்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இதேபோல் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தார்வாரில் உள்ள மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 281 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒமிக்ரான் பல நாடுகளுக்கு பரவ தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட வில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு அதிகாரி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.