ஊரடங்கை அமல்படுத்துவது தவிர்க்க முடியாது : கர்நாடக முதலமைச்சர் பொம்மை அறிவிப்பு

கர்நாடகத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது தவிர்க்க முடியாது - முதலமைச்சர் பசவராஜ் பொம்மை
ஊரடங்கை அமல்படுத்துவது தவிர்க்க முடியாது : கர்நாடக முதலமைச்சர் பொம்மை அறிவிப்பு
Published on
Updated on
1 min read

நாட்டில் ஒமிக்ரான் உள்ளிட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது தவிர்க்க முடியாது என, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெலகாவியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது என்றும், ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கர்நாடகத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது தவிர்க்க முடியாது எனவும், பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com