சிறுத்தையிடம் சண்டையிட்டு குழந்தையை மீட்ட வீரத் தாய்..!

வீரத் தாயை பாராட்டிய மத்திய பிரசதேச முதலமைச்சர்..!

சிறுத்தையிடம் சண்டையிட்டு குழந்தையை மீட்ட வீரத் தாய்..!

வீட்டு வாசலில் இருந்த குழந்தையை கவ்விச் சென்ற சிறுத்தையிடம் இருந்து போராடி தன் குழந்தையை மீட்டுள்ளார். மத்தியபிரதேசத்தை சேர்ந்த வீரத் தாய் ஒருவர். சித்தி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் புலிகள் காப்பகத்திற்கு அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த கிரண், தன் குழந்தைகளுடன் குடிசை வாசலில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று, கிரணின் 8-வயது மகனான ராகுலை கவ்விச் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த கிரண், தனது மற்ற 2 குழந்தைகளை குடிசைக்குள் அனுப்பி விட்டு, சிறுத்தையை 1.கி. மீ தூரத்திற்கு துரத்தி சென்று, அதனை கம்பால் அடித்துள்ளார். குழந்தையை விட்ட அந்த சிறுத்தை, கிரணை தாக்கத் துவங்கியுள்ளது. 
சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு வர, சிறுத்தை காட்டுக்குள் தப்பியோடியது. சிறுத்தை தாக்கியதில், கிரண் மற்றும் அவரது மகன் ராகுலுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தது. மிகவும் வீரத்துடன் போராடி சிறுத்தையிடம் இருந்து மகனை காப்பாற்றிய கிரணுக்கு அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு தெரிவித்துள்ளார்.