நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை.. எப்போதிலிருந்து தெரியுமா?

நாடு முழுவதும் ஜுலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை.. எப்போதிலிருந்து தெரியுமா?

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய டம்ப்ளர், கேரிபேக், பிளாஸ்டிக் தட்டுகள், ஸ்டிரா போன்ற பொருட்களால்  சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. இந்த பிளாஸ்டிக் குப்பைகளால் பருவநிலை மாற்றம்  ஏற்படுகிறது. இதனால், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதில் தீவிரமாக உள்ளன.

இந்த நிலையில் குறைந்த பயன்பாடு மற்றும் அதிக குப்பை கொட்டும் திறன் கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஜூலை 1 முதல் நாடு முழுவதும் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகமத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகங்களின் கீழ் செயல்படும் அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியே  தடை விதித்து மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.