18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி.. நாளை மறுதினம் முதல் - மத்திய அரசு அறிவிப்பு

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் நாளை மறுதினம் முதல் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி.. நாளை மறுதினம் முதல் - மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை நாட்டில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியையும், 83 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசீயையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களில் 45 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாளை மறுதினம் முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டு 9 மாதம் கடந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.