முடிவடைந்த தேர்தல் பிரச்சாரம்..குஜராத் தேர்தல் வெற்றி யாருக்கு?!!!

முடிவடைந்த தேர்தல் பிரச்சாரம்..குஜராத் தேர்தல் வெற்றி யாருக்கு?!!!

குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு நாளை முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

குஜராத் தேர்தல்:

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை குஜராத் சட்டசபை தேர்தல் ஏற்படுத்தியுள்ளது.  அங்கு 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1ம் தேதி,  5ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 

மும்முனை போட்டி:

இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.  இதில் ஆம் ஆத்மி 181 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.  அதன்படி, தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 621 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  அவர்களுள் 139 பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கடைசி நாளான நேற்று பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்தனர். .

தேர்தல் பிரச்சாரம்:

காங்கிரஸ் சார்பில் அக்கட்சி யின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். ஆம் ஆத்மி சார்பில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர்  அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டனர். 

வாக்குப்பதிவு:

இதையடுத்து நாளை முதற்கட்டமாக 89 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:  ”உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக...” டிடிவி தினகரன்!!