அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு!

அசாம் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. 

அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு!

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், முக்கிய ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேற்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

28 மாவட்டங்களில் சுமார் 18 லட்சத்து 94 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்து 930 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமார் 43 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 8 ஆயிரம் பேர், 373 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஹொஜாய் மாவட்டத்தின் தண்டவாளங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், அவசிய தேவைகள் தவிர, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.