மகாராஷ்டிரா: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!!

மும்பை அருகே உள்ள குர்லா என்ற பகுதியில் நேற்று இரவு நான்கு மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்த நிலையில், படுகாயம் அடைந்த நபர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து ஆய்வு செய்ய சம்பவ இடத்துக்கு சென்ற, அம்மாநில அதிகாரி ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவியும், படுகாயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறினார்.