கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்த மருமகள்... குவியும் பாராட்டுகள் 

கொரோனா பாதிப்புக்குள்ளான மாமனாரை மருமகள் ஒருவர் முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்ததுள்ள சம்பவம் அசாமில் அரங்கேறியுள்ளது.

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்த மருமகள்... குவியும் பாராட்டுகள் 

அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வரும் துலேஷ்வர் தாஸுக்கு வயது 75. இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரின் மகன் ஊரில் இல்லாத காரணத்தால் அவரை மருத்துவமனையில் சேர்ப்பது சிக்கலாகியுள்ளது.

இந்நிலையில் அவரின் மருமகளான் நிகாரிகா மட்டுமே இருந்ததால் அவரை முதுகில் சுமந்தபடியே அருகில் இருக்கும் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  

இதையடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் துலேஷ்வரை கொரோனா சிறப்பு வார்டுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அவரை தூக்கி வந்த நிகாரிகாவுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டு மருத்துவமனையில் அனுமதித்துளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.