பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் - பாபா ராம்தேவ்

பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார்.

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் - பாபா ராம்தேவ்

பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் 'கோ மகா சம்மேளன' பிரியாவிடை என்னும் விழாவில் பங்கேற்று பேசிய பாபா ராம்தேவ்,பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் சட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கொண்டு வர வேண்டும் என்றார்.

பசு பாதுகாப்பு குறித்த பிரச்சாரத்தில் பதஞ்சலி பீடம் எப்போதும் முன்னணியில் இருப்பதாகவும் , இந்து தர்ம பிரச்சாரத்திற்கான திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை வாரியத்தின் செயல்பாடுகளையும் வெகுவாக பாராட்டினார்.