கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்திய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கூடுதல் தரவுகளை கோரியுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்திய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கூடுதல் தரவுகளை கோரியுள்ளது.

பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் நிலுவையில் உள்ளதால், வெளிநாட்டு பயணங்களின்போது இந்த தடுப்பூசியை பிற நாடுகள் பரிசீலனை செய்வதில்லை. கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான அனைத்து தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பித்து விட்டது. உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நேற்று கோவாக்சின் தடுப்பூசி பற்றிய தரவுகளை மதிப்பாய்வு செய்தது.

நேற்றைய ஆலோசனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தடுப்பூசி குறித்த கூடுதல் தரவுகளை நிபுணர் குழு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அடுத்த மாதம் 3 ஆம் தேதி இறுதி ஆலோசனையை மேற்கொள்ள உள்ளது.