2019 இல் 6 ஆயிரம் கோடி, 2021 இல் 20 ஆயிரம் கோடி.! கிடுகிடுவென உயர்ந்த இந்தியர்களின் கருப்பு பணம்.! 

2019 இல் 6 ஆயிரம் கோடி, 2021 இல் 20 ஆயிரம் கோடி.! கிடுகிடுவென உயர்ந்த இந்தியர்களின் கருப்பு பணம்.! 

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள பணம் இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

கடந்த ஆண்டிற்கான நிதி சார்ந்த வருடாந்திர தரவுகளை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு கருப்பு பணத்தை இந்தியர்கள் பதுக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஸ்விஸ் வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள்  20 ஆயிரத்து 706 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச தொகையாகும்.  

அதுமட்டுமல்லாமல் 2019ம் ஆண்டு இந்தியர்கள் செய்த முதலீடு  6 ஆயிரத்து 625 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 2 ஆண்டுகளில் இந்த தொகை 20 ஆயிரத்து 706 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2 ஆண்டுகளில் இந்தியர்களின் முதலீட்டு பணம் 3 மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இது வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.