மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர்... விவசாயிகளை குண்டர்கள் என்று பேசிய விவகாரம்...

வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல குண்டர்கள் என்ற தனது கருத்துக்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி மன்னிப்பு கோரியுள்ளார்.

மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர்... விவசாயிகளை குண்டர்கள் என்று பேசிய விவகாரம்...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி, வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விவசாயிகள் அல்ல என்றும் அவர்கள் குண்டர்கள் என்றும் கடுமையாக சாடினார்.
 
இது பெரும் புயலை கிளப்பிய நிலையில் விவசாயிகள் குறித்த தனது சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார். தனது வார்த்தைகள் விவசாயிகளையோ அல்லது வேறு யாரையோ காயப்படுத்தியிருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.