மத்திய அரசுக்கு முன்னதாகவே, தமிழகத்தில் புலிகள் சரணாலயத்தை அறிவித்த தமிழக அரசு!!

மத்திய அரசுக்கு முன்னதாகவே, தமிழகத்தில் புலிகள் சரணாலயத்தை அறிவித்த தமிழக அரசு!!

மத்திய அரசுக்கு முன்னதாகவே, தமிழகத்தில் புலிகள் சரணாலயத்தை அறிவித்து, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

அத்துறை சார்பில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில்,

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில்  கடந்த 1973ம் ஆண்டு புலிகள் திட்டத்தை மத்திய அரசு  தொடங்கியதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாதுகாக்கவும், மக்களுக்கு கல்வி மற்றும் பொழுதுபோக்கு நன்மைகளை அளிக்கவும் இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் முண்டந்துறையில் புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு  புலிகளை பாதுகாத்திடும் விதமாக கடந்த 1962ம் ஆண்டே தமிழக அரசு புலிகள் சரணலாயத்தை அறிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.