’கூ’ சமூக வலைதளத்தில் கணக்கு தொடங்கிய ஆர்.எஸ்.எஸ்

’கூ’ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

’கூ’ சமூக வலைதளத்தில் கணக்கு தொடங்கிய ஆர்.எஸ்.எஸ்

டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை போல், 'கூ' என்ற பெயரில் சமூக வலைதளத்தை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மயங்க் பிடாவட்கா ஆகியோர் தொடங்கினர்.

இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ட சட்டவிதிகளை, பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ஏற்று கொண்டாலும், டுவிட்டர் அதனை மறுத்து வருவதால் மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. 

இதற்கிடையில் இந்தியர்கள் பலரும், கூ சமூக வலைதளத்தில் கணக்கு தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே உள்ளிட்ட பலர், கூ சமூகவலைதளத்தில் இணைந்து உள்ளனர். 

இந்நிலையில் கூ சமூக வலைதளத்தில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. இது பற்றி ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'தொண்டர்கள் மற்றும் மக்களை, இந்திய மொழிகளில் தொடர்பு கொள்ளும் நோக்கில், கூ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., இணைந்துள்ளது' என்றார்.