"காசியின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது" பிரதமர் மோடி பேச்சு!

"காசியின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது" பிரதமர் மோடி பேச்சு!

காசி நகரின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

தமிழில் உரையை தொடங்கிய பிரதமர்:

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில், 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர், வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் தனது உரையை தொடங்கிய பிரதமர், காசி பழமை வாய்ந்தது, தமிழ்நாடு கலாச்சார பெருமை பெற்றது எனக் கூறினார்.

இதையும் படிக்க: கே.எஸ்.அழகிரிக்கு எதிராக திரண்ட முன்னாள் தலைவர்கள்...?

தொடர்ந்து, காசியையும், தமிழகத்தையும் ஒப்பிட்டு பேசிய பிரதமர், காசியில் பனாரஸ் பட்டு மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு மிகவும் சிறப்பு வாய்ந்தவை என்றார். மேலும், காசியில் துளசிதாசரும், தமிழகத்தில் திருவள்ளுவரும் பிறந்த புனித பூமி எனவும் பேசினார்.

முன்னதாக, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் இருந்து, ’நமச்சிவாயம் வாழ்க, நாதன்தாள் வாழ்க’ ஓம் சிவோகம் உள்ளிட்ட பல பக்தி பாடல்களை இசைஞானி இளையராஜா பாடினார். அவரது பாட்டை அங்கிருந்தவர்கள் மெய்மறந்து கேட்டு ரசித்தனர்.