இந்தியக் கலாச்சாரங்களில் கர்நாடகாவின் பங்கு முக்கியமானது - பிரதமர் மோடி!

இந்தியக் கலாச்சாரங்களில் கர்நாடகாவின் பங்கு முக்கியமானது - பிரதமர் மோடி!

இந்தியாவின் அடையாளம், கலாச்சாரம் ஆகியவை கர்நாடக மாநிலத்தின் பங்களிப்பு இல்லாமல் முழுமை பெறாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

டெல்லியில் தல்கதோரா அரங்கத்தில் நடைபெறும் கன்னட கலாச்சார விழாவை பிரதமர் நரேந்திர மோடி முரசு கொட்டி தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கலாச்சார விழா, அமிர்தப் பெருவிழாவை முன்னிட்டு டெல்லியிலுள்ள கர்நாடக சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : ஓபிஎஸ்சின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது...!

இவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தற்போது நடைபெறும் கர்நாடக கலாச்சார விழா மற்றும் இதைப் போன்ற பிற கலாச்சார விழாக்கள் இந்தியாவின் உண்மையான ஆன்மாவை வெளிப்படுத்துவதாக கூறினார். கர்நாடகாவின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகள் வளமை வாய்ந்தது என்றும், அவைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கர்நாடகாவின் ஜனபதா கலை வடிவமானது, சிறந்த பாரம்பரியமிக்கது என்றும், கன்சாரா, பரதநாட்டியம் மற்றும் யக்‌ஷ்கானா ஆகியவை இந்தியாவை பெருமைபடுத்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.